பயங்கரவாதத் தாக்குதலில் சிக்கிய பிரெஞ்சுக் குடிமக்கள்!! படுகொலைகளும், காயங்களும்!!
இத்தாலியின் மாபெரும் உல்லாசப்படகுச் சேவையான MSC யின் MSC Splendida எனும் உல்லாசக் கப்பலில் சென்றவர்களில் ஒன்பது பேர், துனிசியாவின் பயங்கரவாத...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_201.html
இத்தாலியின் மாபெரும் உல்லாசப்படகுச் சேவையான MSC யின் MSC Splendida எனும் உல்லாசக் கப்பலில் சென்றவர்களில் ஒன்பது பேர், துனிசியாவின் பயங்கரவாதத் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் பலியாகி உள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட இரு பிரெஞ்சுப் பிரஜைகளும் இந்த உல்லாசக் கப்பலில் பயணம் செய்தவர்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓய்வு பெற்ற 75 வயதுடைய ஒருவரும், 59 வயதுடைய ஒரவருமே கொல்லப்பட்ட பிரெஞ்சுக் குடிமக்கள் ஆவார்கள். இவர்கள் இருவரும் Tarn மற்றும் Tarn-et-Garonn இனைச் சேர்ந்தவர்கள். மூன்றாவது பிரெஞ்சுப்பிரஜையும் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவித்தாலும் அது இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை.
ஓய்வு பெற்ற 75 வயதுடைய ஒருவரும், 59 வயதுடைய ஒரவருமே கொல்லப்பட்ட பிரெஞ்சுக் குடிமக்கள் ஆவார்கள். இவர்கள் இருவரும் Tarn மற்றும் Tarn-et-Garonn இனைச் சேர்ந்தவர்கள். மூன்றாவது பிரெஞ்சுப்பிரஜையும் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவித்தாலும் அது இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை.
முடிதிருத்துநராக இருந்த ஓய்வு பெற்ற Jean-Claude Tissier, Aussillon (Tarn) இல் கடந்த ஐம்பது வருடங்களாக வசித்து வந்துள்ளார். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இவர் புதன்கிழமை இரவு சாவடைந்துள்ளார். இவர் 2008 முதல் 2014 வரை மாநகரசபை ஆலோசகராகவும் இருந்துள்ளார். இவர் தனது மனைவியுடன் இந்த உல்லாசக் கப்பலில் பயணம் செய்துள்ளார். இந்தக் கப்பல் துனிசியாவில் ஒரு இடைநிறுத்தத்தை ஏற்படுத்தி அங்கு சுற்றுலாச்சுற்று ஒன்றை ஏற்படுத்தியிருந்தது. அதில் அருங்காட்சியகத்திற்குச் சென்ற வேளையிலேயே இவர் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகிப் பலியாகி உள்ளார். இவரது மனைவி இந்தத் தாக்குதலில் காணாமற்போயுள்ளார். இவர் பற்றிய தகவல்கள் எதுவும் இதுவரை தெரியவில்லை.
இரண்டாவதாகக் கொல்லப்பட்ட 59 வயதுடைய Christophe tinois, Castelsarrasin (Tarn-et-Garonne) இனைச் சேர்ந்தவர். குதிரை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள இவரும் இந்த உல்லாசக் கப்பலில் தனது மனைவியுடன் பயணித்து துனிசியாவில் அருங்காட்சியகத்திற்குச் சென்றுள்ளார். இவர் படுகொலை செய்யப்பட, இவரது மனைவி காயங்களின்றித் தப்பிப் பாதுகாப்பாக உள்ளார்.
இதைவிட, இந்தப் பயங்கரவாதத் தாக்குதலில் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகிப் படுகாயமடைந்துள்ள 44 பேரில் ஏழு பேர் பிரெஞ்சுப் பிரஜைகள் எனவும் ஜனாதிபதி மாளிகை தெரிவித்துள்ளது.