மூன்றாவது பிரெஞ்சுப்பிரஜையும் பலியாகி உள்ளார? தேடுதலில் ஜனாதிபதி!!
இன்று ஊடகங்களிற்குப் பதிலளித்த பிரான்சின் ஜனாதிபதி பிரான்சுவா ஒல்லோந், துனிசியாவில் கொல்லப்பட்ட பிரெஞ்சுப்பிரஜைகள் பற்றிய விள...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_893.html
![]() |
இன்று ஊடகங்களிற்குப் பதிலளித்த பிரான்சின்
ஜனாதிபதி பிரான்சுவா ஒல்லோந், துனிசியாவில் கொல்லப்பட்ட பிரெஞ்சுப்பிரஜைகள் பற்றிய விளக்கத்தை அளித்தார்.
"இரண்டு பிரெஞ்சுக் குடிமக்கள், பயங்கரவாதத்
தாக்குதலில், துனியசியாவில் கொல்லப்பட்டுள்ளதை நான் உறுதிப்படுத்துகின்றேன். ஆனாலும் மூன்றாவது பிரெஞ்சுப் பிரஜையும் கொல்லப்பட்டுள்ளதாக ஒரு தகவல் வந்துள்ளது. அது இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை', சோசலிசக் கட்சியின் கூட்டத்திற்காக பெல்ஜியத்தின் தலைநகர் புரூக்செல்ஸ் வந்திருந்த வேளையில் ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
"நாம் எப்பொழுதும் பல தடவைகள் உறுதிப்படுத்தி,
அது நிச்சயமான பின்னரே எதனையும் அறிவிப்பது வழமை. தேசிய இனங்களின் அடிப்படையிலேயே துனிசியா இறந்தவர்களின் விபரங்களை வழங்கி வருகின்றது. ஆனாலும் இன்னமும் கொல்லப்பட்ட பலர் அடையாளம் காணப்படவில்லை" எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். |



Sri Lanka Rupee Exchange Rate