18 ஆண்டிற்கொருமுறை இயற்கை அதிசயம் - பெருந்திரளாக உல்லாசப்பணிகள்!! (காணொளி)
பிரெத்தோன் - நோர்மோந்திக் (Bretagne - de Normandie) கடற்கரைப் பரப்புகளில் பெரும் பேரலைக் காட்சியொன்று இந்த வார இறுதியில் நடைபெற உள்...
http://kandyskynews.blogspot.com/2015/03/18.html
பிரெத்தோன் - நோர்மோந்திக் (Bretagne - de Normandie) கடற்கரைப் பரப்புகளில் பெரும் பேரலைக் காட்சியொன்று இந்த வார இறுதியில் நடைபெற உள்ளது. இதனைக் காண்பதற்காக நாளை முதல் இந்தப் பகுதியில் பல இலட்சம் உல்லாசப்பயணிகள் குவியத் தொடங்க உள்ளனர். இது நாற்றாண்டுப் பேரலை என அழைக்கப்படுகின்றது.
பேரலை அளவீட்டின் உச்சத் தாக்கத்தொகையான 119 இனை இந்தப் பேரலைகள் உருவாக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடல் பல கிலோமீற்றர்கள் உள்ளிழுத்துச் செல்லப்படுப் பெரும் மணற்பரப்பை உண்டாக்கி விட்டு, மீண்டும் மிக வேகமாகப் பெரும் அலைகளுடன் வருவதைக் காணப் பிரெஞ்சு மக்களும், வெளிநாட்டுப் பயணிகளும் நாளையே திரள உள்ளார்கள்.
இப்படியான கடல் அதிசயம் கிட்டத்தட்ட 18 ஆண்டுகளிற்கு ஒரு முறை மட்டுமே நிகழ்கின்றது. இதனால் இந்தப் பகுதிக்கான உல்லாசப்பயணத்துறை பெரும் ஆயத்த வேலைகளில் ஈடுபட்டுள்ளது. பல வாரங்காளகவே, இந்த வார இறுதிக்கு, அந்தப் பகுயின் விடுதிகள் அனைத்தும் முற்பதிவு செய்யப்பட்டு நிறைந்து உள்ளன. எந்த விடுதியிலும் அறைகள் எதுவும் வெறுமையாக இல்லை.
'உல்லாசத்துறைக்கு இது ஒரு அருiமான சந்தர்ப்பம்' எனப் பிரெத்தோன் மாநில உல்லாசத்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார். Saint-Malo (Île-et-Villaine) மற்றும் Mont Saint-Michel பகுதிகள் பெரும் சனத்திரளால் ஆட்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தப் பேரலைகள் ஆபத்தும் நிறைந்தவை. அங்கு வரும் உல்லாசப்பணிகள் பாதுகாப்பான முறையில் இந்த, ஆபத்து நிறைந்த இயற்கை அதிசயத்தைக் காணுமாறு அரசாங்கம் பல பாதுகாப்பு நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. |