மஹிந்தவுக்கு ஆதரவு தெரிவிக்கும் மைத்திரியின் வலது கரம்
ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் பதவியில் போட்டியிட்டால் ஆதரவு வழங்கவுள்ளதாக அமைச்சர் ...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_244.html
ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் பதவியில் போட்டியிட்டால் ஆதரவு வழங்கவுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதமர் வேட்பாளராக மஹிந்த தெரிவு செய்யப்பட்டால் அவரை பிரதமராக்கும் முயற்சிகளுக்கு முழு அளவில் ஒத்துழைப்பு வழங்கத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷ அனுபவம் மிக்க மூத்த அரசியல்வாதி என்ற போதிலும் அவரது குடும்பத்தினர் அவரை சீரழித்து விட்டனர்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் வேறு கட்சியில் போட்டியிட்டால் வெற்றியீட்ட முடியாது என்பது மஹிந்தவுக்கு நன்கு தெரியும்.
ஐக்கிய தேசியக் கட்சியைத் தவிர்ந்த வேறும் கட்சியில் போட்டியிட்டால் 500 வாக்குகளைக் கூட எடுக்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச ஒரு தடவை கூறியதாகவும், இதேவிதமான கருத்தினை சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர் கூட்டமொன்றில் மஹிந்த ராஜபக்ஸவும் குறிப்பிட்டிருந்தார் எனவும் அவர் சுட்டிக்காட்டியள்ளார்.