புதிய ஜனாதிபதியின் வெற்றிக்காக முல்லைத்தீவில் கொண்டாட்டம்(Photo)
புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட மைத்திரிபால சிறிசேனவின் வெற்றியைக் கொண்டாடும் முகமாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆதரவாளர் இன்று ஞாயிற்...

வடக்கு மாகாண ஆளுநரின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் கமலநாதன் விஜிந்தனின் தலைமையில் நடைபெற்ற வெற்றிவிழாக் கொண்டாட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஆதரவாளர்களும், பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
இதன்போது முல்லதை;தீவு நெடுங்கேணி சந்தியில் பட்டாசு கொளுத்தி, பாற்சோறு சமைத்து பொதுமக்களுக்கும், பயணிகளுக்கும் கொடுத்து தமது வெற்றியைக்கொண்டாடி மகிழ்ந்தனர்.
இங்கு மக்கள் மத்தியில் கருத்து தெரிவித்த வடமாகாண அளுநரின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர் கமலநாதன் விஜிந்தன் குறிப்பிடுகையில்,
நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்துவதற்காக புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதுவிதபாகுபாடின்றி வாக்களித்த முல்லைத்தீவு மாவட்டத்தில் வாழும் தமிழ்-முஸ்லிம் மற்றும் சிங்களம் மக்களுக்கு எமது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இதுவரை காலமும் முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதின் ஊடாக முல்லைத்தீவு மாவட்டத்தில் பல அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளதை எல்லோரும் அறிந்த விடயமே. அதுபோல இனிவருகின்ற புதிய அரசாங்கத்தின் பூரண ஒத்துழைப்பில் முன்னரும் செய்யத அபிவிருத்திப்பணியை விடவும் மேலும் அபிவிருத்தி, தொழில்வாய்ப்பு என்பவற்றை எமது மாவட்டத்திற்கும், மக்களுக்கும் பாகுபாடின்றி பெற்றுக்கொடுக்கப்படும்.
எனவே, அனைவரும் ஒற்றுமையாக இருப்பதன் மூலமே எல்லாவற்றையும் பெற்றுக்கொள்ள முடியும். ஜனாதிபதித் தேர்தலில் தலைவர்களின் ஒற்றுமையாலேயே அடக்கு முறை அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஒற்றுமையே எமது பலமாகவும் இருக்கிறது என்றார்.


