இலங்கை அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய கட்சித் தாவல் இன்று
இலங்கை அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய கட்சித் தாவல் இன்று மாலை( 12) இடம்பெற்றது. சிறிலங்கா சுதந்திர கட்சியின் 20 உறுப்பினர்கள் புதிய ஜனாதிபதி...

சிறிலங்கா சுதந்திர கட்சியின் 20 உறுப்பினர்கள் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து கொண்டனர்.
புதிய அமைச்சரவையை அமைக்க தங்களது முழு ஆதரவையும் வழங்குவதாகவும் இவர்கள் குறிபிட்டனர்.
சுதந்திரக் கட்சியின் தலைவராக மைத்திரிபால தெரிவு
சிறிலங்கா சுதந்திர கட்சியின் புதிய தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் சுதந்திரக் கட்சியின் செயலாளராக துமின்த திசாநாயக்க தேசிய அமைப்பாளராக ஜானக தென்னகோன் மற்றும் பொருலாளராக நாவின்ன தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.
மைத்திரியுடன் இணைந்த உறுப்பினர்களின் பெயர்கள் சில வருமாறு
சரத் அமுனுகம, அதாவுட செனவிரத்ன ,ரெஜினோல்ட் குரே ,றி.பி ஏக்கநாயக்க , விஜித விஜயமுனி சொய்சா, எஸ்.பி நாவின்ன, ஜகத் புஸ்பகுமார, தயாசிறி ஜெயசேகர, பியசேன கமகே, சனத் ஜெயசூரிய மற்றும் கருனா அம்மன்