ஜனாதிபதி மைத்திரி தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி சந்தேகம்
ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையில் முரண்பாட்டு நிலை நேற்று ஆரம்பமாகியுள்ளது. ஊவா மாகாண முதலமைச்சர்...


ஊவா மாகாண முதலமைச்சர் ஹரின் பெர்ணான்டோ,நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போது வெளியிட்ட கருத்து இதனை உணர்த்துகின்றது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் நடத்திய இரகசிய சந்திப்பு தொடர்பில் கருத்துரைத்த ஹரின் பெர்ணான்டோ, மைத்திரிபாலவின் இரகசிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று குற்றம் சுமத்தியுள்ளார்.
முன்னதாக இருவரும் சபாநாயகர் சமல் ராஜபக்சவின் வீட்டில் சந்தித்தாக கூறப்பட்டது எனினும் அவர்கள் இருவரும் வேறு ஒரு இரகசிய இடத்திலேயே சந்தித்துள்ளனர்.
இது உண்மையில் ஜனாதிபதி தம்மை தாமே நினைத்து வெட்கப்படவேண்டியுள்ளது என்று ஹரின் குறிப்பிட்டார். இந்த சம்பவம் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியினர் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் ஹரின் சுட்டிக்காட்டினார்.
மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக கொண்டு வந்தமைக்கு ஐக்கிய தேசியக் கட்சியே முன்னின்று உழைத்தது. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினர் மஹிந்த ராஜபக்சவுக்கு அப்போது ஆதரவை வழங்கினர். எனினும் தற்போது ஜனாதிபதி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தி வருவதாக ஹரின் குற்றம் சுமத்தினார்.