'அமெரிக்காவின் சதிக்கு வீழ்ந்துவிடாதீர்கள்' இந்தியாவுக்கு சீனா அதிபர் ஜி ஜின்பிங்அனுப்பிய குடியரசுதின செய்தி!

அமெரிக்காவின் சதிக்குள் வீழ்ந்துவிடாதீர்கள்" என இந்திய குடியரசுதின விழாவையொட்டி வெளியிட்ட செய்தியில் சீனப் பத்திரிகைகள் இந்தியாவுக்கு வ...

John-Amaratungaஅமெரிக்காவின் சதிக்குள் வீழ்ந்துவிடாதீர்கள்" என இந்திய குடியரசுதின விழாவையொட்டி வெளியிட்ட செய்தியில் சீனப் பத்திரிகைகள் இந்தியாவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளன. நாடுமுழுவதும் இன்று 66- வது குடியரசு தின விழா கோலாகலகமாக கொண்டாடப்பட்டது. குடியரசு தினவிழாவில் அமெரிக்க அதிபர் ஒபாமா, அவரது மனைவி மிச்செல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். குடியரசுதின விழாவையொட்டி, சீன அதிபர் ஜி ஜின்பிங், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு வாழ்த்து செய்தி அனுப்பினார்.

அமைதி மற்றும் வளர்ச்சியில் உயர்மட்டநிலையை அடைய செய்வது தொடர்பாக ஒத்துழைப்பு நட்புறவை மேம்படுத்த இந்தியாவுடனான ஒருங்கிணைந்த முயற்சிகளை செய்ய" சீனா விரும்புவதாக ஜி ஜின்பிங் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் "அமெரிக்காவின் சதிக்குள் வீழ்ந்துவிடாதீர்கள்" என இந்திய குடியரசுதின விழாவையொட்டி வெளியிட்ட செய்தியில் சீனப் பத்திரிகைகள் இந்தியாவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளன. "அமெரிக்காவின் சதிக்குள் வீழ்ந்துவிடாதீர்கள்" என்ற கோரிக்கை தாங்கிய கட்டுரையுடன் சீனாவில் வெளியான குளோபல் டைம்ஸ் மற்றும் பீப்பிள்ஸ் டெய்லி ஆகிய பத்திரிக்கைகளில் இன்று வெளியாகியுள்ளது. சீனாவின் குளோபல் டைம்ஸ் மற்றும் பீப்பிள்ஸ் டெய்லி பத்திரிக்கையில் வெளியான கட்டுரைகளில்,

"அமெரிக்காவின் சதிவலையில் இந்தியா வீழ்ந்துவிட வேண்டாம். பெய்ஜிங்கிற்கு எதிராக புதுடெல்லியை திசை திருப்ப வாஷிங்டன்னால்(அமெரிக்காவால்) முயற்சிக்கப்படுகிறது. அதற்காகவே அண்மைகாலமாக இந்தியாவுடன் அமெரிக்கா அதிகளவு நெருக்கம் காட்டுகிறது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் ஒருவர் தனது பதவிக்காலத்தில் இரண்டாவது முறையாக இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளது இதுவே முதல் முறையாகும். அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் இந்திய வருகை சர்வதேச அளவில் சந்தேகத்திற்கு இடமின்றி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

"ஆசியாவில் முன்னிலை" என்று அமெரிக்காவின் தந்திரத்திற்கு ஆதரவை பெருவதற்கு அமெரிக்கா, இந்தியாவை கூட்டாளியாக மாற்றிக்கொள்ள கொள்கை தளர்வுகளை செய்துள்ளது. சீனாவின் எழுச்சியை கட்டுப்படுத்த ஆசிய நாடுகளில் தனது ஆதிக்கத்தை விஸ்தரிக்க விரும்பும் அமெரிக்கா, இந்தியாவை கூட்டாளியாக்க வரலாற்று சிக்கல்களில் வேறுபாடுகளை களைந்து பெரும் முயற்சி எடுத்து வருகிறது என்று மேற்கத்திய மீடியாக்களில் வெளியாகிய செய்திகளை குறிப்பிட்டு சீன பத்திரிக்கை கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுடன் நட்பு பாராட்டுவது, சீனாவின் டிராகன் மற்றும் இந்திய யானைக்கு (சீனாவுக்கும் - இந்தியாவுக்கும்) இடையே நிரத்தரப் பகையை ஏற்படுத்துவதற்கான அமெரிக்காவின் உள்குத்து வேலையாகும். இந்தியாவுடன் நெருங்கிவந்து இருநாடுகள் இடையே நிரந்தரப் பகையை ஏற்படுத்துவதே அமெரிக்காவின் திட்டம். இந்தியாவை அதன் பெரியஅண்டை நாட்டால் எழுந்துள்ள அச்சுறுத்தல்களுக்கு தயாராக வேண்டும் என்று இந்தியாவை அமெரிக்கா தூண்டிவிடுகிறது. என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியா மிகவும் கவனமான நிலையில் உள்ளது என்று எச்சரிக்கை விடுத்துள்ளது சீன நாளிதழ்கள் அமெரிக்காவில் மிகவும் சாதுரியமாக விரிக்கப்பட்டுள்ள சதிவலையில் இந்தியா சிக்கிவிடக்கூடாது. "இரு நாடுகள் இடையே நிலவும் மிகவும் சிக்கலான பிரச்சினைகளைக்கூட பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ள இரு நாடுகளும் முன்வர வேண்டும்" என்று அறிவுரை வழங்கியுள்ளது. "இரு நாடுகளும் தங்களது உறவு, வாழ்க்கை அல்லது மரணம் என்ற போராட்டத்திற்கு எடுக்க முடியாதது என்பதை உறுதி செய்ய வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளது.

Related

உலகம் 7315888494021066649

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item