ஒபாமா தரையிறங்கும்போது 2 பைட்டர் ஜெட் விமானங்கள் பாதுகாப்பு தந்தன!
இந்தியாவுக்கு வருவதற்காக அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிசலி ஆகியோர் நேற்று ஆண்டிரிவ்ஸ் ஏர் ஸ்பேஸ் விமானத் தளத்திலிருந்து ஏர் போ...
http://kandyskynews.blogspot.com/2015/01/2_27.html
இந்தியாவுக்கு வருவதற்காக அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிசலி ஆகியோர் நேற்று ஆண்டிரிவ்ஸ் ஏர் ஸ்பேஸ் விமானத் தளத்திலிருந்து ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் புறப்பட்டனர். ஏற்கனவே, தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக தாஜ்மஹால் பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், வட அமெரிக்க விமான பாதுகாப்பு கமாண்ட் (NORAD) பிரஸ்டன் ஒபாமாவுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியிட்டார்.டுவிட்டர் மூலமாக ஆன்லைனில் இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, உடனடியாக ஒபாமாவின் விமானத்திற்கு பாதுகாப்பு அளிக்க போர்ட்லாண்டுக்கு இரண்டு F-16 fighter jet விமானங்கள் வரவழைக்கப்பட்டன. அட்லாண்டாவில் ஒபாமாவின் விமானம் பாதுகாப்பாக இறங்கவே இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரிஸ்டன் தெரிவித்தார்.


Sri Lanka Rupee Exchange Rate