இறப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு காவலரை மனதார பாராட்டிய கலாம்
ஐ.ஐ.எம். கல்வி நிறுவனத்தில் உரையாற்றிக் கொண்டிருந்த கலாம் நிலைகுலைந்து சரியும் சில மணித் துளிகளுக்கு முன் தனக்கு பாதுகாப்பு வழங்கிய காவலரை ...


ஐ.ஐ.எம். கல்வி நிறுவனத்தில் உரையாற்றிக் கொண்டிருந்த கலாம் நிலைகுலைந்து சரியும் சில மணித் துளிகளுக்கு முன் தனக்கு பாதுகாப்பு வழங்கிய காவலரை அழைத்து பாராட்டியுள்ளார்.
டெல்லியில் இருந்து அசாம் தலைநகர் கவுகாத்திக்கு விமானத்தில் சென்ற கலாம் பிறகு அங்கிருந்து காரில் ஷில்லாங் சென்றார்.
122 கி.மீ. தூர பயணத்தை அவர் காரிலேயே மேற்கொண்டார்.
அப்போது அவருடன் பாதுகாப்புக்கு செல்ல ஒரு பொலிசார் நியமிக்கப்பட்டார்.
பிறகு விழா அரங்குக்கு சென்ற கலாம், பேச அழைக்கப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு அவர் தனக்கு பாதுகாவலராக வந்த பொலிசாரை அழைத்து வாழ்த்தியுள்ளார்.
கிழக்கு காசி மலைப்பிரதேச எஸ்.பி. காக்ரங் இது குறித்து அளித்த பேட்டியில், குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம், அவருக்கு நாள் முழுவதும் பாதுகாப்பு அளித்த கான்ஸ்டபிளுக்கு தனது பாராட்டை தெரிவித்தார்.
அப்துல் கலாம் அழைக்கிறார் என்றதும் முதலில் அந்த காவலர் அச்சம் கொண்டார்.
‘வழி நெடுங்க எனக்கு மிகச் சிறப்பான பாதுகாப்பு கொடுத்தீர்கள். உங்களுக்கு ரொம்ப நன்றி’ என்று கலாம் அவரை வாழ்த்தியுள்ளார்.
பாராட்டு கிடைத்தபோது அந்த காவலர் நெகிழ்ச்சியடைந்தார். கலாமின் சிறப்பே அவரது சிறிய விஷயங்களைக்கூட மனமார பாராட்டுவதே என்று எஸ்.பி. தெரிவித்துள்ளார்.