அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரருக்கு பந்துவீச்சுப் பயிற்சியளிக்கும் கௌதம் கம்பீர்
அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த இளம் சுழல் பந்துவீச்சாளர் அஸ்டன் ஏகர் தன்னுடைய பந்து வீச்சை மேம்படுத்திக்கொள்ளும் வகையில் இந்திய கிரிக்கெட் வீரர்...


அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த இளம் சுழல் பந்துவீச்சாளர் அஸ்டன் ஏகர் தன்னுடைய பந்து வீச்சை மேம்படுத்திக்கொள்ளும் வகையில் இந்திய கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீரின் உதவியைப் பெற்றுள்ளார்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் டெஸ்ட் போட்டியில் அறிமுகமான அஸ்டன் ஏகர் 11 ஆவது வீரராக களமிறங்கி 98 ஓட்டங்களைப் பெற்று அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். ஆனால் பந்து வீச்சில் பெரிதாக சோபிக்கவில்லை. இதனால் அணியிலிருந்து நீக்கப்பட்டிருந்தார்.
தற்போது சென்னையில் அவுஸ்திரேலிய ஏ அணிக்காக விளையாடி வரும் அவர் செய்தியாளர்களிடம் பேசும் போது
“சில வாரங்களுக்கு முன் பேர்த் வந்த கம்பீருக்கு பந்து வீசும் வாய்ப்பு கிடைத்தது. சுழற்பந்துகளை மிகச் சிறப்பாக விளையாடக் கூடியவரான அவர் என்னுடைய பந்து வீச்சில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் பற்றி சில ஆலோசனைகளை வழங்கினார். தற்போது அவற்றை பின்பற்றி வருகிறேன். விரைவில் அவுஸ்திரேலியாவின் டெஸ்ட் அணியில் இடம் பிடிப்பேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.