இலங்கை பெண் தாக்கியதில் பிலிப்பைன்ஸ் பெண் மரணம்!
ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தில் தொழில் புரிந்து வரும் இலங்கையை சேர்ந்த வீட்டுப் பணிப்பெண்ணொருவர் தாக்கியத்தில் மற்றுமொரு வீட்டுப் பணிப்பெண் உயிரி...


ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தில் தொழில் புரிந்து வரும் இலங்கையை சேர்ந்த வீட்டுப் பணிப்பெண்ணொருவர் தாக்கியத்தில் மற்றுமொரு வீட்டுப் பணிப்பெண் உயிரிழந்துள்ளார்.
இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் இந்த தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.
தாக்குதலுக்கு உள்ளான பெண் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
ஃஹூஜிரா என்ற பிரதேசத்தில் இந்த பெண்கள் தொழில் புரிந்து வந்துள்ளனர். சம்பவத்தில் உயிரிழந்த பெண் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்தவர் என ஐக்கிய அரபு ராஜ்ஜிய காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.