மைத்திரிபாலவை வெற்றி பெறச் செய்ய, பேருவளை மக்கள் வழங்கிய பங்களிப்பு மகத்தானது -ராஜித

ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ச வெற்றி பெற்றிருந்தால் நாம் வெலிக்கடைச் சிறைக்குள் தள்ளப்பட்டிருப்போம். மக்கள் புத்திசாலித்தனமாக ...




ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ச வெற்றி பெற்றிருந்தால் நாம் வெலிக்கடைச் சிறைக்குள் தள்ளப்பட்டிருப்போம். மக்கள் புத்திசாலித்தனமாக செயற்பட்டதன் காரணமாக நாட்டில் நல்லாட்சி மலர்ந்து சர்வாதிகாரம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது என அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறினார்.


அளுத்கமை நகரில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்வில் பேசும் போது அவர் இவ்வாறு கூறினார். அமைச்சர் மேலும் கூறியதாவது;


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வெற்றி பெறச் செய்ய பேருவளை மக்கள் வழங்கிய பங்களிப்பு மகத்தானது. அவர்களுக்கு நன்றி கூறுகிறேன்.


அரசின் 100 நாள் வேலைத்திட்டம் சரிவர அமுல்படுத்தப்படுகிறது. மக்களுக்கு கொடுத்த வாக்குறுதி படிப்படியாக நிறைவேற்றப்படும். மக்கள் சர்வாதிகார ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து நல்லாட்சியை ஏற்படுத்தியுள்ளனர். மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளையும் தீர்க்க எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.


ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றமை நாட்டு மக்களின் பாக்கியமாகும். தப்பித் தவறியேனும் மஹிந்த ராஜபக்ஸ வெற்றி பெற்றிருந்தால் நாம் இன்று வெலிக்கடை சிறைக்குள் தள்ளப்பட்டிருப்போம் என்றும் குறிப்பிட்டார்.


பேருவளை பிரதேச சபை உறுப்பினர்களான தினேஷ் பியங்கர, ரன்தீச கருணாரத்ன உட்பட பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.



Related

பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டமை, மஹிந்தவின் அரசியல் சவப்பெட்டிக்கு காரணமாகியது - முன்னாள்பிரதியமைச்சர் நியோமல் பெரேரா

பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டமை, மஹிந்தவின் அரசியல் சவப்பெட்டிக்கு காரணமாகியது - முன்னாள் பிரதியமைச்சர் நியோமல் பெரேரா கடும்போக்குடைய சிங்கள பௌத்த கொள்கைகளே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...

அமைச்சுப் பதவியில் இருந்து விலக பைசர் முஸ்தபா முடிவு?

அமைச்சர் பைசர் முஸ்தபா தனது அமைச்சுப் பொறுப்பு தொடர்பாக கடும் அதிருப்தியுடன் இருக்கும் நிலையில், பதவியை ராஜினாமா செய்யும் முடிவில் இருப்பதாக தெரிய வந்துள்ளது. முன்னாள் பிரதியமைச்சர் பை...

நகர அபிவிருத்தி, நீர் விநியோக திட்டங்களுக்கு உதவ சவுதி வாக்குறுதி: அமைச்சர் ஹகீம்

நகர அபிவிருத்தி, நீர் விநியோகம் போன்றவற்றிற்கு சவூதி அபிவிருத்தி நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்வது தொடர்பில் அமைச்சர் ரவூப் ஹக்கீம், அதன் உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளார். மறைந்த சவூத...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item