பொதுத் தேர்தலில் புதிய கட்சியொன்றின் கீழ் மஹிந்த பிரதமர் வேட்பாளராக களமிறங்கிறார்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக களமிறக்குவதற்கு, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ந...

mahinda_2008131முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக களமிறக்குவதற்கு, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நான்கு பங்காளிக் கட்சிகள் இணைந்து எதிர்வரும் வியாழக்கிழமையன்று புதிய கூட்டணியொன்றை உருவாக்கவுள்ளதாக தெரியவருகின்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன தலைமையிலான மக்கள் ஐக்கிய முன்னணி, மேல் மாகாணசபை உறுப்பினர் உதய கம்மன்பில தலைமையிலான பிவிதுரு ஹெல உறுமய, நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தலைமையிலான ஜனநாயக இடதுசாரி முன்னணி ஆகிய நான்கு பங்காளிக் கட்சிகளும் இணைந்தே இந்த தீர்மானத்தை எடுத்துள்ளன.

தினேஸ் குணவர்தன எம்.பி தலைமையில் முன்வைக்கப்பட்டுள்ள இந்த யோசனையின் பிரகாரம், மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் வேட்பாளராக களமிறக்குவதற்கான மக்கள் கூட்டங்களை நடத்தும் ஏற்பாடுகளை இந்த கட்சிகள் ஏற்கெனவே முன்னெடுத்துவிட்டன என்று தெரிவிக்கப்படுகின்றது.

சிலவேளை, மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் வேட்பாளராகக் களமிறக்க ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இணங்கவில்லையாயின், புதிய கட்சியொன்றின் கீழ் பொதுத் தேர்தலில் போட்டியிட இக்கட்சிகள் தீர்மானித்துள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது.

Related

உலக அளவில் 2450 போட்டியாளர்கள் கலந்துகொண்ட குவைத் அல்-குர்ஆன் மனனப் போட்டியில் இலங்கை மாணவன் முதலிடம்.

கௌரவத்துக்குரிய முன்னால் குவைத் பாராளுமன்ற உறுப்பினரும் சபாநாயகருமான ‘ஜாஸிம் கராபி’ அவர்களின் மறைந்த தந்தை ‘முஹம்மத் அப்துல் முஹ்ஸின் கராபி’ அவர்கள் நினைவாக வருடாந்தம் நிகழ்த்தப்பட்டு வரும் அல்-குர்ஆன...

அனைத்து இன மக்களது நம்பிக்கையை வெற்றிகொள்ள வேண்டியது அவசியம் – ஜனாதிபதி

ஜனவரி மாதம் 8 ஆம் திகதி தோல்வியடைந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை மீண்டும் வெற்றிபெறச் செய்ய வேண்டியது எமது பொறுப்பு என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவிக்கின்றார். கட்சியின் தலைவர் பதவியை ஏற்ற ந...

கொழும்பு வெளிப்புற சுற்றுவட்ட வீதியின் நிர்மாணப் பணிகள் அடுத்த வாரம் ஆரம்பம்

கொழும்பு வெளிப்புற சுற்றுவட்ட வீதியின் 3 ஆம் கட்ட நிர்மாணப் பணிகள் அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பெருந்தெருக்கள் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய கடவத்தையிலிருந்த...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item