முதல் முறையாக சிறைக்கும் செல்லும் ஒபாமா
அமெரிக்காவின் ஆக்லஹோமா நகரில் உள்ள எல் ரினோ சிறைக்கு வருகிற 16 ம் திகதி அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா விஜயம் செய்யவிருக்கிறார். அமெரிக்காவில் பல...

http://kandyskynews.blogspot.com/2015/07/blog-post_969.html

அமெரிக்காவின் ஆக்லஹோமா நகரில் உள்ள எல் ரினோ சிறைக்கு வருகிற 16 ம் திகதி அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா விஜயம் செய்யவிருக்கிறார்.
அமெரிக்காவில் பல மாகாணங்களில் சிறைக்கைதிகளுக்கு வாக்குரிமை கிடையாது, ஏனெனில் கிரிமினல் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களின் குடியுரிமை பறிக்கப்படுகிறது.
இந்த சட்டத்தின் கீழ் கருப்பினத்தவர்களே அதிகமாக கைது செய்யப்படுகிறார்கள்.
கிரிமினல் சட்டத்தில் பல சீர்திருத்தங்களை கொண்டு வருவதன் நோக்கமாக இந்த பயணம் அமையும் என கூறப்படுகிறது.
அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் பதவியில் இருக்கும்போது சிறைக்கு விஜயம் செய்வது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.