ரணிலை தோற்கடிக்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை களமிறக்க வேண்டும்
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை தோற்கடிக்க வேண்டுமாயின் முன்னாள் ஜனாதிபதி மகிந்தவை பிரதமர் வேட்பாளராக களமிறக்க வேண்டும் என மேல் மாகாண சபை உறுப...


எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தோல்வியைத் தழுவினால்இ இன்னும் 20 ஆண்டுகளுக்கு எதிர்க்கட்சியில் இருக்க நேரிடும்.அந்த தோல்வியை ஏற்றுக்கொள்ள மனதை திடப்படுத்திக்கொள்ள வேண்டியதுதான். நாட்டில் பிரிவினைவாதம் உருவாகி தனிநாடு ஒன்று உருவாவதனை தடுக்க முடியாது.பொதுத் தேர்தலில் கூட்டமைப்பு வெற்றியீட்ட வேண்டுமாயின் பிரதமர் வேட்பாளராக மஹிந்த ராஜபக்ச போட்டியிட வேண்டும். வேறு யார் போட்டியிட்டாலும் ரணில் வெற்றியீட்டுவார்.
மஹிந்தவை வெற்றியீட்டச் செய்ய புதிய கூட்டணி ஒன்றை அமைக்கவும் நாம் தயார் என உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பில் சிங்கள ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.