தந்தையை போல் பேய்க்கு பயந்த மகன்: சிங்கள ஊடகம்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு வரவழைக்க வேண்டாம் என வலியுறுத்தி கடந்த நாட்களில் பாராளுமன்றத்தில் சில உற...

http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_188.html

அன்றைய இரவு முழுவதும் பாராளுமன்ற உறுப்பினர்களின் நாடக மற்றும் கூத்துகளே அவை.
பாராளுமன்ற உறுப்பினர் ரி.பி.ஏக்கநாயக்கவிற்கு வெற்றிலை போடாமல் இருக்க முடியாது என்பது பலர் அறிந்த ரகசியம்.
அன்று பாராளுமன்றத்தில் தங்கியிருந்த போது அவர் இந்த வயிற்று பசியை உணர்ந்தார்.
ரி.பியினால் சாப்பிடாமல் இருக்க முடியாமையால் ஒரு வாய் வெற்றிலை கொண்டு வந்திருந்தார்.
எவ்வாறு இருந்த போதிலும் வெற்றி மெல்லும் போது எச்சில் துப்ப எச்சில்பணிக்கம் தேவையல்லவா? அச்சந்தர்ப்பத்தில் ரி.பிக்கு லொஹான் ரத்வத்த எச்சில் பணிக்கத்தை ஆயத்தப்படுத்திக்கொடுத்துள்ளார்.
ரத்வத்தே வெற்று தண்ணீர் போத்தல் ஒன்றினை கொண்டுவந்து மோட்டார் வாகன சாவியை பயன்படுத்தி அதனை பாதியாக வெட்டி ரி.பிக்கு எச்சில் பணிக்கம் தயார்படுத்தி கொடுத்துள்ளார்.
இதேவேளை, ரோஹித்த அபேகுணவர்தன சிறந்த பேச்சாளர் என்பது யாவரும் அறிந்த ஒரு விடயமாகும்.
அன்றும் அவர் பாராளுமன்றத்தில் இருந்த அனைத்து உறுப்பினர்களையும் நகைக்க வைக்கும் கதைகளை கூறியுள்ளதோடு, ரெஜினோல்ட் குரே போல் மிமிக்ரி செய்து காட்டியுள்ளார்.
அது அவ்வாறிருக்க ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவின் ஆவி பாராளுமன்றத்தில் உலாவுவதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த கதையை கேட்ட அங்கிருந்த இளம் உறுப்பினர்கள் கூடுதலாக பயந்ததுடன், அவர்கள் பாராளுமன்ற ஊழியர்களிடம் வினவுவதற்காக ஒவ்வொரு இடங்களுக்கு சென்றுள்ளனர்.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அவையில் இருந்து வெளியேறி செங்கோல் வைக்கும் இடத்தில் படுத்துக்கொண்டுள்ளார் என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.