இனரீதியான பிளவுகளுக்குள் நாட்டை மீண்டும் தள்ளிவிடக் கூடாது!- ஜனாதிபதி
இனரீதியான பிளவுகளுக்கு நாட்டின் மீண்டும் தள்ளி விட தயாராகி விடக்கூடாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன ரீதியான பிள...
http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_168.html

இன ரீதியான பிளவுகள் காரணமாகவே பிரபாகரன் போன்ற தீவிரவாதிகள் உருவானதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் என அனைத்து இன மக்களும் சகோதரத்துவத்துடன் கைகோர்த்து கொண்டால் மாத்திரமே நாடு என்ற வகையில் முன்னோக்கி செல்ல முடியும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
தம்புள்ளையில் இன்று நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாத்தளை மாவட்ட பிரதிநிதிகளின் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது கிடைத்துள்ள ஜனநாயக சுதந்திரத்தை மாத்திரமல்லாது, ஊடக சுதந்திரத்தையும் சரியான முறையில் பயன்படுத்த வேண்டியது அனைவரதும் பொறுப்பாகும் என்றும் ஜனாதிபதி மேலும் கூறியுளளார்.


Sri Lanka Rupee Exchange Rate