மகிந்தவுடன் இணைய தயார் நிலையில் மைத்திரி
நான் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முன்னேற்றத்திற்காக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் இணைந்து செயற்பட ஆயத்தமாகவுள்ளதாக ஜனாதிபதி மைத...


காலியில் இடம் பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பிரதிநிதிகள் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்த தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நான் ஸ்ரீ.சு.கவின் முன்னேற்றத்தை கருத்திற்கொண்டே மகிந்தவுடனான கலந்துரையாடலுக்கும் சம்மதம் தெரிவித்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் மே தின பேரணியில் கலந்துக்கொள்ளுமாறு கட்சி செயலாளர் முன்னாள் ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்தார் ஆனால் அவர் அதனையும் புறக்கணித்தார்.
அதனால் தான் எனக்கும் மகிந்தவிற்கும் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்தார்கள் கட்சியினை மனதில் கொண்டே நான் அதற்கு சம்மதம் தெரிவித்தேன்.
எனவே கட்சியின் நலனுக்காக எதிர்வரும் நாட்களில் மகிந்தவுடன் இணைந்து செயற்பட விரும்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.