அவுஸ்திரேலியாவில் இலங்கை அகதிக்கு 20 வருடம் சிறை
அவுஸ்திரேலியா, தென் அடிலெயிட் என்ற இடத்தில் நிகழ்ந்த கொலை தொடர்பில் இலங்கையை சேர்ந்த அகதி ஒருவருக்கு 20 வருடம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு...


கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நிகழ்ந்த இக்கொலைச் சம்பவத்திற்கமைய இச்சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கொலை நிகழ்ந்த சந்தர்ப்பத்தில் குடி போதையில் இருந்த குறித்த இலங்கையர், கொலைக்கு பயன்படுத்திய கூரிய ஆயுதம் மற்றும் அச்சந்தர்ப்பத்தில் அணிந்திருந்த ஆடைகளை மறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
அடிலெயிட் நீதிமன்றில் கொலைக்காக வழங்கப்படும் குறைந்தப்பட்ச 20 ஆண்டு சிறை தண்டனை இலங்கையருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளது.
சதீஷ்வரன் சுப்பையா என்ற 31 வயதுடைய இலங்கை சேர்ந்த ஒருவருக்கே இவ்வாறு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.