அல் ஜசீரா தொலைக்காட்சிக்கு இந்திய மத்திய அரசு தடை

இந்தியாவின் தவறான வரைபடத்தைக் காட்டியதற்காக அல் ஜசீரா ​தொலைக்காட்சி சேவையை இந்திய மத்திய அரசு 5 நாற்களுக்கு தடை விதித்துள்ளது. இதனால் அல...

அல் ஜசீரா தொலைக்காட்சிக்கு இந்திய மத்திய அரசு தடை
இந்தியாவின் தவறான வரைபடத்தைக் காட்டியதற்காக அல் ஜசீரா ​தொலைக்காட்சி சேவையை இந்திய மத்திய அரசு 5 நாற்களுக்கு தடை விதித்துள்ளது.

இதனால் அல் ஜசீரா தொலைக்காட்சி இந்தியாவில் தற்போது ஒளிபரப்பாகவில்லை.

அல் ஜசீரா தொலைக்காட்சி ஒளிபரப்பாகும் எண்ணில்,மத்திய தகவல் ஒலிபரப்புத்துறையின் உத்தரவுப்படி இந்த தொலைக்காட்சி சேவை, ஏப்ரல் 22 ஆம் திகதி 1 மணியிலிருந்து 2015, ஏப்ரல் 27 ஆம் திகதி 1 மணி வரை ஒளிபரப்பப்பட மாட்டாது என்ற செய்தி இடம் பெற்றுள்ளது.

முன்னதாக 2013 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் பலமுறை இந்த தொலைக்காட்சி சேவை காட்டிய இந்திய வரைபடமானது தவறானதாக இருந்தது.

குறிப்பா காஷ்மீரை இந்தியாவின் பகுதி இல்லை என்பது போல காட்டிய வரைபடங்களை இந்த சேவை ஔிபரப்பியிருந்தது.

இதுகுறித்து மத்திய அரசின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டமையை தொடர்ந்து இதுகுறித்து ஆராயுமாறு இந்திய சர்வேயர் ஜெனரலுக்கு மத்திய அரசு உத்தரவிட்டது.

இதையடுத்து ஆராய்ந்த மத்திய சர்வேயர் ஜெனரல், மத்திய அரசு அளித்த அறிக்கையில், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியான ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சில பகுதிகள் அதாவது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், அக்சய் சீன் ஆகிய பகுதிகள் அல் ஜசீரா காட்டிய வரைபடத்தில் இடம் பெறவில்லை எனவும் மேலும், இந்தியாவின் வரைபடத்தில் அந்தமான் தீவுகள், லட்சத் தீவுகள் ஆகியவையும் இடம் பெறவில்லை என்றும் கூறியிருந்தார்.

மேலும் முறையான வரைபடங்களை அல் ஜசீரா தொலைக்காட்சி சேவை காட்டுவதில்லை என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது, இதையடுத்து தற்போது இந்தி மத்திய அரசு அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.

இதற்கு அல் ஜசீரா தொலைக்காட்சி சேவை கண்டனம் தெரிவித்துள்ளது, இந்திய அரசு கட்டாயத் தணிக்கையை நடத்தியுள்ளது எனவும் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளது.

Related

தலைப்பு செய்தி 5835955831716002080

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item