நாசாவின் புதிய ஆராய்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு 11 இலட்சம் ரூபா சம்பளம்
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘நாசா’, ஒரு புதிய ஆராய்ச்சியில் ஈடுபட உள்ளது. விண்வெளியில் புவிஈர்ப்பு விசை இருக்காது அதனால் அங்கு...
http://kandyskynews.blogspot.com/2015/04/11_23.html
விண்வெளியில் புவிஈர்ப்பு விசை இருக்காது அதனால் அங்கு அனுப்பப்படும் தங்களது விண்வெளி வீரர்களுக்கு என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்றும், படுத்த நிலையில் இருக்கும் அவர்களுக்கு என்ன மாதிரியான உடற்பயிற்சிகளை சிபாரிசு செய்யலாம் என்றும் அறிவதற்காக இந்த ஆராய்ச்சியில் ஈடுபடுகிறது.
இதற்காக, ‘பெட் ரெஸ்ட்’ ஆராய்ச்சி ஒன்றை அறிவித்துள்ளது இதில் பங்கேற்க பொதுமக்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர் ஆனால், அமெரிக்க குடிமகனாகவோ அல்லது நிரந்தர குடியுரிமை பெற்றவராகவோ இருக்க வேண்டும்.
விண்வெளி வீரர்களை போன்றே அவர்களது உடல்நிலை இருக்க வேண்டும் என்பதால், அவர்கள் பல்வேறு உடல் தகுதிகளுக்கு பிறகே தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
அப்படி தேர்வானவர்கள், ‘பெட் ரெஸ்ட்’ ஆராய்ச்சி நடக்கும் அரங்கில், முதல் 3 வாரங்கள் வழக்கமான அன்றாட பணிகளில் ஈடுபடலாம், பிறகு, 70 நாட்களுக்கு அவர்கள் படுக்கையில் படுத்தே இருக்க வேண்டும்.
அந்த கோணத்திலேயே பணிகளை செய்வதுடன், உடற்பயிற்சிகளும் செய்ய வேண்டும் இப்படியெல்லாம் செய்வதற்கு ‘நாசா’ நிறுவனம் தலா 11 இலட்சம் ரூபா சம்பளம் வழங்குகிறது.