அழுத்தங்கள் இல்லாது புதுவருடத்தை கொண்டாட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது!- பிரதமர்
அழுத்தங்கள் மற்றும் அடக்குமுறைகள் இன்றி புத்தாண்டை கொண்டாட வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் வி;க்ரமசிங்க தெரிவித்துள்ளார். தமிழ் சி...

http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_762.html

தமிழ் சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அழுத்தங்கள் இன்றி புதுவருடத்தை அனைவரும் கொண்டாட வாய்ப்பு கிட்டியமை மிகவும் முக்கியமானது.
இது வசந்த காலமாகும், இன, மத மொழி பேதங்கள் இன்றி அனைத்து மக்களும் இலங்கையர் என்ற ரீதியில் கொண்டாட்டங்களில் ஈடுபடும் காலம் என்ற ரீதியில் கொண்டாட்டங்களில் ஈடுபடும் காலமாகும்.
தமிழ் சிங்கள புதுவருடம் இலங்கை வாழ் மக்களுக்கு மிகவும் முக்கியமானதோர் கலாச்சார கலை நிகழ்வாகும்.
வரலாற்றுக் காலம் முதலே இயற்கையுடனும் விவசாயத்துடனும் நெருங்கிய தொடர்புடைய இலங்கையர்களுக்கு புதுவருடம் மிகவும் முக்கியமானதாகும்.
தேசிய ஒற்றுமை, சகோதரத்துவம், மகிழ்ச்சி, சௌபாக்கியம் போன்றவற்றை மெருகூட்டும் நிகழ்வாகவே இதனை கருதுகின்றோம்.
தமிழ் சிங்கள புதுவருடம் இனங்களுக்கு இடையில் சமாதானத்தையும் சௌபாக்கியத்தையும் ஏற்படுத்தும் மகிழ்ச்சியான வருடமாக மலரட்டும் என பிரதமர் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.