ஈராக்கில் குழந்தைகளை உயிரோடு புதைத்து கொல்லும் ஐ.எஸ். தீவிரவாதிகள்: ஐ.நா.அதிர்ச்சி தகவல்

ஈராக்கில் குழந்தைகளை உயிரோடு புதைத்து ஐ.எஸ். தீவிரவாதிகள் கொலை செய்வதாக ஐ.நா. அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி...

news_04-02-2015_17Menace111ஈராக்கில் குழந்தைகளை உயிரோடு புதைத்து ஐ.எஸ். தீவிரவாதிகள் கொலை செய்வதாக ஐ.நா. அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். தீவிரவாதிகள் அங்கு வாழும் மைனாரிட்டிகளான யாஷிடி மற்றும் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவர்களது குழந்தைகளையும், சிறுவர், சிறுமிகளையும் கடத்தி கொன்று விடுகின்றனர்.

அவர்களில் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களை தற்கொலை படைக்கு மனித குண்டுகளாக பயன்படுத்துகின்றனர். வெடிகுண்டு தயாரிக்கவும், அமெரிக்க குண்டு வீச்சில் இருந்து தப்பிக்க மனித கேடயமாகவும் உபயோகிக்கின்றனர்.

பெண்கள் மற்றும் சிறுமிகளை மார்க்கெட்டுகளில் ‘செக்ஸ்’ அடிமைகளாக விற்பனை செய்கின்றனர். குண்டு வீச்சில் சிக்கி படுகாயம் அடைந்து எதற்கும் பயன்படாத குழந்தைகளை சிலுவையில் அறைந்தும், மண்ணில் உயிருடன் புதைத்தும் கொடூரமாக கொலை செய்கின்றனர்.

மேலும் அவர்களை பட்டினி போட்டும், தண்ணீர் தராமலும் கொல்கின்றனர். இந்த தகவலை ஐ.நா. சபையின் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

Related

உலகம் 2823778281299920249

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item