ஈராக் தலைநகரில் ஊரடங்கு உத்தரவு நீக்கப்படவுள்ளது
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் பல ஆண்டுகளாக அமலில் இருந்துவந்த ஊரடங்கு உத்தரவு இந்த வார இறுதியில் நீக்கப்படவுள்ளதாக அங்கிருந்துவரும் தகவல்...
http://kandyskynews.blogspot.com/2015/02/blog-post_51.html
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் பல ஆண்டுகளாக அமலில் இருந்துவந்த ஊரடங்கு உத்தரவு இந்த வார இறுதியில் நீக்கப்படவுள்ளதாக அங்கிருந்துவரும் தகவல்கள் கூறுகின்றன.
சனிக்கிழமை முதல் இந்த ஊரடங்கு உத்தரவை தளர்த்துமாறு பிரதமர் ஹைதர் அல்-அபாதி உத்தரவிட்டுள்ளதாக உள்துறை அமைச்சின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.
ஈராக் தலைநகரில் சகஜநிலையை திரும்பச்செய்வதே இதன் நோக்கம் என்று கருதப்படுகின்றது.
ஊரடங்கு உத்தரவு நேரம் அவ்வப்போது மாறிவந்துள்ளது.
இப்போது, நள்ளிரவு முதல் காலை 5 மணிவரை ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளது.
பாக்தாத்தில் இன்னும் கார்க்குண்டுத் தாக்குதல்களும் ஏனைய ஆயுததாரிகளின் தாக்குதல்களும் நடந்துவருகின்றன.
எனினும், இஸ்லாமிய அரசு ஆயுதக்குழுவிடமிருந்து வரும் அச்சுறுத்தல்கள் தலைநகரில் குறைந்துள்ளதாக பிபிசி செய்தியாளர் ஒருவர் கூறினார்.