முக்கிய தகவல்கள் திருடப்பட்ட அதிர்ச்சியில் அமெரிக்கா: பழியை மறுக்கும் சீனா

அமெரிக்காவில் அரசாங்க ஊழியர்களின் கணினியில் உள்ள முக்கிய ஆவணங்கள் திருடப்பட்டுள்ளதால் 40 லட்சம் ஊழியர்கள் பாதிக்கப்படகூடும் என தகவல் தெரிவிக...

அமெரிக்காவில் அரசாங்க ஊழியர்களின் கணினியில் உள்ள முக்கிய ஆவணங்கள் திருடப்பட்டுள்ளதால் 40 லட்சம் ஊழியர்கள் பாதிக்கப்படகூடும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்காவின் அரசாங்க வலைதளத்தை ஹேக்(Hack) செய்த சிலர் அதில் இருந்த தகவல்களை திருடியுள்ளனர்.

இந்நிலையில் அமெரிக்காவின் இணைய பாதுகாப்புக்கு கடுமையான அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊழியர்களின் வங்கி கணக்கு, அவர்களின் கடவுச்சொல், தனிப்பட்ட தகவல்கள் ஆகியவை திருடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதனால் இதனால் முன்னாள் மற்றும் இன்னாள் அரசாங்க ஊழியர்கள் 40 லட்சம் பேர் பாதிக்கப்படகூடும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் இந்த திருட்டுக்கு சீனாதான் காரணம் என்று சிலர் குற்றஞ்சாட்டியுள்ளனர். ஆனால் அதை சீனா மறுத்துள்ளது.

இது தொடர்பாக வாஷிங்டனில் உள்ள சீனா தூதரகத்தை சேர்ந்த செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகையில் இந்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்ற மற்றும் காரணமற்றவை என்று தெரிவித்துள்ளார்.

இந்த திருட்டின் மூலம் அமெரிக்க அரசாங்க வலைதளத்தின் பாதுகாப்பு குறைபாடு தெளிவாக தெரிந்துவிட்டது என்று சிலர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் அரசாங்க அதிகாரி ஒருவர் கூறுகையில், தற்போது அமெரிக்கா ஹேக்கிங் மூலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதைபோன்று மீண்டும் நடைபெறாமல் இருக்க பாதுகாப்பு விடயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.


Related

தலைப்பு செய்தி 9176130144740613887

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item