சந்திரிக்காவை பின்பற்றுவாரா மைத்திரி?

இலங்கையின் ஜனாதிபதியாக சந்திரிக்கா இருந்தபோது 2003 நவம்பர் 4ம் திகதி அன்று ஐக்கிய தேசிய கட்சியின் முக்கிய மூன்று அமைச்சர்களை பதவியில் இருந்த...

இலங்கையின் ஜனாதிபதியாக சந்திரிக்கா இருந்தபோது 2003 நவம்பர் 4ம் திகதி அன்று ஐக்கிய தேசிய கட்சியின் முக்கிய மூன்று அமைச்சர்களை பதவியில் இருந்து தூக்கினார்.
பாதுகாப்பு , உள்துறை மற்றும் தொலைத்தொடர்பு ஆகிய பொறுப்புகளை தன் கட்சியை சேர்ந்தவர்களிடம் ஒப்படைத்தார்.

அவரது இந்த செயலுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது.

மேலும் அடுத்த சில மாதங்களில் நாடாளுமன்றம் கலைக்க்படுவதற்கும் இது ஒரு காரணமாக அமைந்தது.

இதில் கவனிக்கத்தக்க விடயம் என்னவென்றால் 2001 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அவரது கட்சி தோல்வி அடைந்ததால் அந்த மூன்று அமைச்சர்களிடமிருந்து அவர்களது பதவியை சந்திரிக்கா பறித்ததுமே அவர் சட்டபூர்வமாக ஆட்சி உரிமையை இழக்க நேரிட்டது.

மேலும் நாட்டின் பொருளாதாரமும் வீழ்ச்சிப் பாதையில் சென்று கொண்டு இருந்தது. அவரது செல்வாக்கும் சரியத் தொடங்கியது.

இருந்தாலும் துணிச்சலாக அவர் இந்த நடவடிக்கையை எடுத்தார். இந்த செயல்களின்மூலம் ஏற்பட்ட விளைவுகள் ஒரு பக்கம் இருந்தாலும் சந்திரிக்காவுக்குள் இருந்த துணிச்சல் ஜனாதிபதி என்னும் பதவிக்கு இருந்த அதிகாரத்தை வைத்து தான் நினைத்ததை செய்ய வைத்தது.


இதிலிருந்து மைத்திரி பால ஸ்ரீசேன ஒன்றை கற்றுக்கொள்ள வேண்டும். அதாவது 19வது சட்டதிருத்தத்துக்கு பிறகு சந்திரிக்காவுக்கு இருந்த அதிகாரம் மைத்திரிக்கு இல்லை என்பது உண்மை தான்.

எனினும் 2003 ஆம் ஆண்டு ஆட்சி அமைக்கும் போது சந்திரிக்காவுக்கு இருந்த புகழைவிட அதிகமாக புகழ் மைத்திரிபால ஸ்ரீசேனாவுக்கு உள்ளது.

மேலும் 19ஆவது சட்டதிருத்தத்துக்கு பின்னரும் இலங்கையில் அதிகாரம் மிக்க நபராகவே அவர் இருந்து வருகிறார். அரசியல் சாசனத்தில் மாற்றம் கொண்டுவரவும் அரசியல் சமன்பாட்டில் திருத்தம் மேற்கொள்ளவும் மற்றும் பல உரிமைகள் அவருக்கு உள்ளது.

இந்நிலையில் இலங்கையில் பொது தேர்தலை நடத்துவதற்கு ஆர்வமாக இருக்கும் ஐக்கிய தேசிய கட்சி, தேர்தல் விவகாரங்களில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ள மைத்திரி செய்யும் முயற்சிகளை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.

மேலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை சேர்ந்தவர்களும் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்று கோஷம் எழுப்பி வருகின்றனர்.

ஒருவேளை தேர்தலில் சீர்திருத்தம் செய்தே ஆக வேண்டும் என்று மைத்திரி விரும்பினால் தேர்தலுக்கு முன்பாகவே 20வது சட்டதிருத்தத்தை அவர் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தாக வேண்டும். அதற்கு அவர் சந்திரிக்காவின் வழியையே பின்பற்றியாக வேண்டும்.

Related

தலைப்பு செய்தி 4024502943261307839

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item