ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி 117 ஆசனங்களை பெற்றுக்கொள்ளும் – மஹிந்த நம்பிக்கை
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணிக்கு தேசிய அரசாங்கத்தில் இணைவதற்கு அவசியமில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கல்கமுவ ...

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணிக்கு தேசிய அரசாங்கத்தில் இணைவதற்கு அவசியமில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கல்கமுவ பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்,
அன்று தேசிய அரசாங்கம் குறித்து நம்பிக்கையற்றவர்கள் இன்று அதனை குறித்து தொடர்ந்து பேசுகின்றனர்.
எனவே ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணிக்கு தேசிய அரசாங்கத்தில் இணைவதற்கான எவ்வித அவசியமும் கிடையாது.
இம்முறை பொது தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணி 117 ஆசனங்களை பெற்றுக்கொள்ளும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மேலும் குறிப்பிட்டுள்ளார்.