ஓய்வூதியத்தில் புதிய திட்டம் அவசியம்: ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
அரச ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் நடவடிக்கைக்குள் புதிய திட்டமொன்றின் தேவை ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ...

http://kandyskynews.blogspot.com/2015/07/blog-post_182.html

அரச ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் நடவடிக்கைக்குள் புதிய திட்டமொன்றின் தேவை ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே ஜனாதிபதி இதனைக் கூறினார்.
இதன்போது உரையாற்றிய ஜனாதிபதி, அரச ஊழியர்கள் குறிப்பாக இராணுவத்தில் இருப்பவர்கள் 43 முதல் 45 வயதுக்குள் ஓய்வு பெறுவது நாட்டின் அபிவிருத்தியில் ஏற்படும் நட்டமாகவே தாம் கருதுவதாகத் தெரிவித்தார்.
வேகமாக அபிவிருத்தியடைந்து வரும் நாடு என்ற வகையில், அரச சேவையில் முப்படையினர் போன்ற அனைத்து பிரிவினரையும் கருத்திற்கொண்டதில், ஓய்வுபெறும் கொள்கை தொடர்பில் புதிய திட்டமொன்று அவசியம் என தாம் எண்ணுவதாகவும் குறிப்பிட்டார்.