அரையிறுதிக்கு முன்னேறிய அர்ஜென்டினா
தென் அமெரிக்க நாடுகள் பங்கேற்கும் 44வது கோபா அமெரிக்க கால்பந்து தொடர் சிலியில் நடைபெற்று வருகிறது. வினா டெல் நகரில் நடந்த காலிறுதியில் அர...


வினா டெல் நகரில் நடந்த காலிறுதியில் அர்ஜென்டினா, கொலம்பியா அணிகள் மோதின.
முதல் பாதி, இரண்டாம் பாதி இரண்டிலும் இரு அணி வீரர்களும் கோல் அடிக்கவில்லை.
கூடுதல் நேரத்திலும் அடிக்காததால் போட்டி ‘பெனால்டி ஷூட்–அவுட்’ முறைக்கு சென்றது. இதில் அதிரடியாக விளையாடிய அர்ஜென்டினா அணி 5–4 என வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.
