அபாரமாக கேட்ச் பிடித்த பிராவோ: புதிய உச்சத்தை தொடப்போகும் கிரிக்கெட்
உலக அளவில் விளையாட்டு போட்டிகளை ஒளிபரப்பு செய்து வரும் ஈ.எஸ்.பி.என் தொலைக்காட்சி நிறுவனம் ஆண்டுதோறும் ‘எஸ்பிஸ்’ என்ற விருதை வழங்கி வருகிறத...


மிக உயர்வான விருதாக இது கருதப்படுவதால் இந்த விருதை பெறும் வீரர்கள் உலகம் முழுவதும் அறியப்படுவார்கள்.
தற்போது அந்த விருதுக்கான பரிந்துரையில் ஐ.பி.எல் கிரிக்கெட்டில் பிராவோ பிடித்த கேட்ச் ஒன்றும் இடம்பிடித்துள்ளது.
இந்த ஐ.பி.எல் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற போட்டியில் வாட்சன் அடித்த பந்தை சிக்ஸ் லைனில் பிராவோ அபாரமாக துள்ளி கேட்ச் பிடித்தார்.
இந்த கேட்ச் மிகவும் சிறந்தது என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
கடந்த 1983-ம் ஆண்டில் இருந்து இந்த விருது வழங்கப்படுகிறது. தற்போதுதான் முதல்முறையாக கிரிக்கெட் போட்டியின் சிறந்த காட்சி இதில் இடம்பெற்றுள்ளது.
பிராவோ கேட்ச் இதில் இடம்பெற்றுள்ளதால் கிரிக்கெட் பற்றியே அறியாத பல நாடுகளில் கிரிக்கெட்டை கொண்டு சென்ற பெருமை ஐ.பி.எல். போட்டிக்கு கிடைத்துள்ளது.