இரண்டரை வயது மகனை வாஷிங் மெஷினுக்குள் போட்டு, புகைப்படத்தை பேஸ்புக்கில் பகிர்ந்த இளம் தாய்
லண்டனில் 21 வயதுடைய கர்ட்னி ஸ்டீவர்ட் என்ற இளம் தாய் தனது இரண்டரை வயது மகனை வாஷிங் மெஷினுக்குள் போட்டு அதை புகைப்படம் எடுத்து தனது பேஸ்புக...
http://kandyskynews.blogspot.com/2015/07/blog-post_352.html

லண்டனில் 21 வயதுடைய கர்ட்னி ஸ்டீவர்ட் என்ற இளம் தாய் தனது இரண்டரை வயது மகனை வாஷிங் மெஷினுக்குள் போட்டு அதை புகைப்படம் எடுத்து தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியதோடு பல தரப்பில் இருந்து கண்டனம் வெளியானது. மேலும்
இது குறித்து சில சமூக ஆர்வலர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர் அப்போது அவர் தனது மகனுக்கு வாஷிங் மெஷின் மிகவும் பிடிக்கும். அவனுக்கு விளையாட்டு காட்டவே தான் இதுபோல் செய்தேன் என்று கூறியுள்ளார். எனினும் தனது இந்த செயலுக்கு மன்னிப்பு கோரியுள்ள அவர் இந்த படத்தை ஒரு நகைசுவைக்காகவே பேஸ்புக்கில் பகிர்ந்து கொண்டேன் என கூறியுள்ளார்.
.இந்த விவகாரம் குறித்து 2 போலீஸ் அதிகாரிகள் ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக விசாரணை நடத்தினர். வாஷிக் மிஷி மின் இணைப்பில் இருந்து துண்டிக்கப்பட்டிருந்தது. தனது வீட்டில் காலை 11 மணிக்கு விளையாட்டாக இந்த வேலையை செய்ததாக அவர் கூறினார்.


Sri Lanka Rupee Exchange Rate