இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவாளர்களுக்கு விளக்கமறியல்
டிக்கோயா இன்ஜெஸ்ட்ரி தோட்டத்தின் பொது முகாமையாளரை கடந்த வாரம் அச்சுறுத்தினார்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட இலங்கை தொழிலாளர்...
http://kandyskynews.blogspot.com/2015/07/blog-post_189.html
டிக்கோயா இன்ஜெஸ்ட்ரி தோட்டத்தின் பொது முகாமையாளரை கடந்த வாரம் அச்சுறுத்தினார்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவாளர்கள் ஏழு பேரையும் விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதவான் நேற்ற உத்தரவிட்டார்.
குறித்த தோட்ட முகாமையாளரை அச்சுறுத்தியதாகவும், பறித்த தேயிலை கொழுந்துகளை முகாமையாளரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு முன்பதாக கொட்டியதாகவும் அவர் நோர்வூட் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்திருந்தார்.
இதனையடுத்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டதன் பின் இச்சம்பவத்துடன் தொடர்புடைய டிக்கோயா இன்ஜெஸ்ட்ரி தோட்ட கீழ் பிரிவிலுள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவாளர்கள் ஏழு பேரை கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் நேற்று ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய போது குறித்த சந்தேக நபர்களை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்திரவிட்டார்.


Sri Lanka Rupee Exchange Rate