ஒரே நாளில் டுனிசியா, குவைத், பிரான்ஸில் தாக்குதல்: ஐ.எஸ் அமைப்பின் சதி திட்டமா? (வீடியோ இணைப்பு)

நேற்று ஒரே நாளில் டுனிசியா, குவைத், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் நாடுகளில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் ஐ.எஸ் அமைப்பின் சதித்திட்டமாக இருக்கலாம் என...

நேற்று ஒரே நாளில் டுனிசியா, குவைத், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் நாடுகளில் நடத்தப்பட்ட தாக்குதல்கள் ஐ.எஸ் அமைப்பின் சதித்திட்டமாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்சின் லியான் நகரில் உள்ள ரசாயன தொழிற்சாலை ஒன்றில் நேற்று காலை நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் ஒருவர் பலியானார். மற்றும் பலர் காயமடைந்தனர்.

இது தொடர்பாக பொலிசார் ஒருவரை கைது செய்துள்ளனர். அவரது கையில் ஐ.எஸ் கொடி இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதேபோல் டுனிசியா நாட்டின் கடற்கரையில் தீவிரவாதி ஒருவன் நடத்திய தாக்குதலில் இதுவரை 37 பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பின்னர் பொலிசார் தாக்குதல் நடத்தி அவரை சுட்டுக்கொன்றனர்.

இறுதியாக குவைத்தின் மசூதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 25 பேர் பலியாகியுள்ளதாகவும், 200க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மசூதியில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மட்டுமே ஐ.எஸ் தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர். இந்நிலையில் இந்த மூன்று தாக்குதலும் ஐ.எஸ் அமைப்பினர் திட்டமிட்டு நடத்தியதாக இருக்கலாம் என்று பலர் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

சில தினங்களுக்கு முன்னர்தான் தங்களை பின்பற்றுவர்களிடன் ரம்ஜான் மாதத்தை அழிவின் மாதமாக மாற்ற வேண்டும் ஐ.எஸ் அமைப்பினர் தெரிவித்திருந்தனர் என்றும் கூறப்படுகிறது.




Related

உலகம் 4264978368905043635

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item