வெடிகுண்டு அச்சுறுத்தலால் மூடப்பட்ட விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டது
வெடிகுண்டு அச்சுறுத்தல் ஒன்றைத் தொடர்ந்து நேற்றிரவு மூடப்பட்ட கனடா நியூஃபண்லாண்டின் St. John’s அனைத்துலக விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட...
http://kandyskynews.blogspot.com/2015/06/blog-post_769.html

நேற்றிரவு St. John’s விமான நிலையத்தில் இருந்து ஒடாவா நோக்கி எயார் கனடா விமானம் ஒன்று புறப்பட்டபோது, விமானத்தில் குண்டு இருப்பதாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதென விமான நிலைய நிர்வாகம் தெரிவித்தது.
82 பயணிகள், மற்றும் நான்கு பணியாளர்கள் இருந்த அந்த விமானம், மீண்டும் முனையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அதில் இருந்தவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார்கள்.
மேலும், அவர்கள் விமான நிலையத்தின் பிரதான தளத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
இதையடுத்து வெடிகுண்டு அச்சுறுத்தலால் விமான நிலையம் மூடப்பட்டது.
இந்நிலையில், நான்கரை மணி நேரம் வான் போக்குவரத்துக்கு மூடப்பட்ட விமான நிலையம் உள்ளுர் நேரப்படி நேற்றிரவு 11:30 மீண்டு, திறக்கப்பட்டுள்ளது.


Sri Lanka Rupee Exchange Rate