மைத்திரி – மஹிந்தவிற்கு இடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்துவது எனது ஒரே நோக்கம்!- எதிர்க்கட்சித் தலைவர்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கும் இடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதே தமது ஒரே நோக்கம் என எதிர...


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கும் இடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதே தமது ஒரே நோக்கம் என எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
பதவிகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற எவ்வித ஆசையும் எனக்கு கிடையாது.
மஹிந்தவையும் மைத்திரியையும் சமாதானப்படுத்த வேண்டும் என்பதே எனது நோக்கமாகும்.
இரண்டு தரப்பிற்கும் இடையிலான முரண்பாடுகள் களையப்பட வேண்டும்.
இந்த முரண்பாடு நீடித்தால் எதிர்காலத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் கைகலப்பு ஏற்படும்.
மஹிந்த ராஜபக்சவை தோதல் மேடையில் ஏற்றி பிரச்சாரம் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
சிங்கள பத்திரிகையொன்று தொலைபேசி மூலம் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.