ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்தது!- திலான்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் இந்நாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு இடையிலான முரண்பாட்டை தீர்ப்பதற்காக அமைக்கப்பட்டு...


மஹிந்த ராஜபக்சவுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதம மந்திரி வேட்பாளர் நிலை அல்லது வேட்பு மனு எதுவும் வழங்கப்படாது என்று குறித்த நாடாளுமன்றக் குழுவிடம் ஜனாதிபதி கூறிவிட்டதாக அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரட்ன நேற்று முன்தினம் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து எழுந்த நிலைமைகள் தொடர்பிலேயே நாடாளுமன்ற உறுப்பினர்கள், நேற்று ஜனாதிபதியை சந்தித்து பேச்சு நடத்தினார்கள்.
பேச்சுவார்த்தையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த நாடாளுமன்ற உறுப்பினர் திலான் பெரேரா, ஜனாதிபதி அவ்வாறான எந்தக் கருத்தையும் தம்மிடம் கூறவில்லை என்று குறிப்பிட்டார்.
இந்தநிலையில் நேற்று மாலை இடம்பெற்ற பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
எனினும் பேசப்பட்ட விடயங்கள் குறித்து அவர் எந்த தகவலையும் வெளியிடவில்லை.
மஹிந்த- மைத்திரி முரண்பாட்டு தீர்வுக்குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள்- ஜோன் செனவிரட்ன, குமார வெல்கம, திலான் பெரேரா, டி பி ஏக்கநாயக்க, அனுர பிரியதர்சன யாப்பா, சுசில் பிரேமஜயந்த ஆகியோர் உள்ளடங்கியுள்ளனர்