ராஜிதவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை?
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு பிரதமர் பதவியோ, தேசியப் பட்டியல் எம்.பி பதவியோ, பொதுத் தேர்தலில் போட்டியிட வேட்பு மனுவோ வழங்க முடியா...


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு பிரதமர் பதவியோ, தேசியப் பட்டியல் எம்.பி பதவியோ, பொதுத் தேர்தலில் போட்டியிட வேட்பு மனுவோ வழங்க முடியாது என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரத்ன ஜனாதிபதி தெவித்ததாக அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.
இவ்வாறாக போலியான கருத்துக்களை வெளியிட்டமையினால் ராஜிதவுக்கு எதிராக ஒழுகாற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மஹிந்த சார்பில் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற டலஸ் அழகபெருமவினால் இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது,
கட்சியினை பிளவுபடுத்தும் நோக்கத்தில் பொறுப்பற்ற வகையில் இவ்வாறான கருத்துக்களை வெளியிடுவது தவறென குறிப்பிட்டுள்ளார்.
மாத்தறையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்த கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் நாட்களில் கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்களை இணைத்துக்கொண்டு மீண்டும் இக்கோரிக்கையை முன்வைக்கவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.