எதிர்க்கட்சியிடம் மக்கள் கேள்விகளை எழுப்ப வேண்டும்: நிதியமைச்சர்
400 பில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி முறி பத்திரங்களை வெளியிட அனுமதி கோரி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட யோசனையை தோற்கடித்தமை குறித்...
http://kandyskynews.blogspot.com/2015/04/blog-post_597.html
இது தொடர்பாக கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துரையாடிய போது வாக்கெடுப்பின்றி நிறைவேற்ற எதிர்க்கட்சி இணக்கம் வெளியிட்டிருந்தது.
இந்த பணம் அரசாங்கம் மக்களுக்காக செலுத்தும் பணம் என்பதை அறிந்திருப்பதால், அதற்கு வாக்கெடுப்பை கோர போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா கூறியிருந்ததாகவும் நிதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
400 பில்லியன் ரூபா பெறுமதியான மேலதிக திறைசேரி முறி பத்திரங்களை வெளியிட அனுமதி கோரி நேற்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட யோசனை 21 மேலதிக வாக்குகளினால் தோற்கடிக்கப்பட்டது.
யோசனை தோற்கடிக்கப்பட்டமையானது அரசாங்கத்தின் இருப்புக்கு எந்த வகையிலும் தடையாக இருக்காது எனவும் தோல்வியடைந்தது சட்டமூலம் அல்ல எனவும் ஒழுங்குவிதி ஒன்று மாத்திரமே தோல்வியடைந்தது எனவும் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை எதிர்க்கட்சியின் இந்த நடவடிக்கையானது பின்னால் இருந்து முகில் கத்தியால் குத்துவதற்கு ஈடானது என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.
இதனை எதிர்க்க போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன கூட கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் தெரிவித்திருந்தார் எனவும் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.
திறைசேரி முறி பத்திரங்கள் மூலம் சமூர்த்தி பயனாளிகளுக்கு நிவாரணத்தை வழங்கவும் விவசாயிகளின் நெல்லை கொள்வனவு செய்வது போன்ற நடவடிக்கைகளுக்காக நிதியை திரட்ட அரசாங்கம் தீர்மானித்திருந்தது என நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே குறித்த யோசனையை நேற்று நாடாளுமன்றத்தில் தோற்கடித்தமை சம்பந்தமாக கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அனுரபிரியதர்ஷன யாப்பா, ஐக்கிய தேசியக் கட்சி கூறும் சகலவற்றும் கைகளை தூக்க தமது கட்சி தயாரில்லை என கூறினார்.
திறைசேரி முறி பத்திர யோசனையை நிறைவேற்றி கொள்ளும் எவ்விதமான தேவையும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு இருக்கவில்லை எனவும் அது பற்றி எதிர்க்கட்சியுடன் கலந்துரையாடப்படவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


Sri Lanka Rupee Exchange Rate