சிறிலங்காவின் போர்க்குற்ற அறிக்கை! ஐ.நாவில் பிரித்தானியா கருத்து
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் சிறிலங்கா தொடர்பான விசாரணை அறிக்கை வெளியிடப்படுவதை நீண்டகாலத்திற்கு பிற்போடக்கூடாதென பிரித்தானியா அறிவித்துள...
http://kandyskynews.blogspot.com/2015/03/blog-post_75.html

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் சிறிலங்கா தொடர்பான விசாரணை அறிக்கை வெளியிடப்படுவதை நீண்டகாலத்திற்கு பிற்போடக்கூடாதென பிரித்தானியா அறிவித்துள்ளது.
பிரித்தானியாவின் வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியக இராஜாங்க அமைச்சர் பரோனஸ் அனெலி இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
ஜெனிவாவில் நேற்று ஆரம்பமாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 28வது அமர்வில் அவர் உரையாற்றினார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அமைய, சமர்ப்பித்திருக்க வேண்டிய சிறிலங்கா குறித்த விசாரணை அறிக்கையை சமர்ப்பிப்பதையும், அதுகுறித்த விவாதத்தையும், ஒத்திவைக்க ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செய்த பரிந்துரைக்கு பிரித்தானியா ஆதரவளிக்கிறது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் சிறிலங்கா தொடர்பான விசாரணை அறிக்கையை வெளியிடுவதை செப்டெம்பர் மாதத்துக்குப் பின்னரும் தாமதிக்கக் கூடாது.
அத்துடன் ஐ.நா மனிதஉரிமை ஆணையாளரின் நிலைப்பாட்டை பிரித்தானியா ஏற்றுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


Sri Lanka Rupee Exchange Rate