மஹிந்தவை தன்பக்கம் இழுக்க 650 பில்லியன்களை வழங்கிய சீனா!
சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் அரசாங்கத்திற்கு சீனா 650 பில்லியன் ரூபாவினை கடனாக வழங்கியமை தெரியவந்துள்ளது. இவை அனைத்த...
http://kandyskynews.blogspot.com/2015/03/650.html

சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் அரசாங்கத்திற்கு சீனா 650 பில்லியன் ரூபாவினை கடனாக வழங்கியமை தெரியவந்துள்ளது.
இவை அனைத்தும் இருதரப்பு ஒப்பந்தங்களின் ஊடாக சிறிலங்காவுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் சீன வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவின் சீன பயணத்தின் போது, சீன அரசாங்கம் சிறிலங்காவுக்கு பெற்றுக்கொடுத்த கடன்கள் தொடர்பிலான விவரங்களை கேட்டிருந்தார்.
அவரின் வேண்டுகோளை ஏற்று இந்த விவரங்களை சீன வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளதாக ரொய்டர் செய்திச்சேவை தகவல் வெளியிட்டுள்ளது.
கடன் தொடர்பான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வதற்காக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, எதிர்வரும் நாட்களில் சீனாவுக்கு செல்லவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கடனானது சிறிலங்காவின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காகவே வழங்கப்பட்டதாக சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஹூவா ஜயினியிங் கூறியதாக அந்த செய்திகளில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Sri Lanka Rupee Exchange Rate