விக்னேஸ்வரன், ஹக்கீமின் இனவாதத்தை எவரும் கண்டுகொள்ளவில்லையாம்! ஞானசார தேரரின் வருத்தம்
சிங்கள இனவாதம் என்று எல்லா அரசியல்வாதிகளும் கத்துகின்றனர். விக்னேஸ்வரனின் இனவாதமோ, ஹக்கீமின் இனவாதமோ ஒருவருக்கும் தென்படுவதில்லை எ...

சிங்கள இனவாதம் என்று எல்லா அரசியல்வாதிகளும் கத்துகின்றனர். விக்னேஸ்வரனின் இனவாதமோ, ஹக்கீமின் இனவாதமோ ஒருவருக்கும் தென்படுவதில்லை என விசனம் தெரிவித்துள்ளார் பொதுபல சேனாவின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே தேரர் இதனைக் கூறினார்.
|
கண்டி சிங்கள உடன்படிக்கை குறித்து நன்கு கற்குமாறு இந்த நாட்டின் பிரதமரையும் நல்லாட்சி அரசியல் வாதிகளையும் நாம் கேட்டுக் கொள்கின்றோம். அரசியல் செய்ய முன்னர், நாட்டை வழிநடாத்த முன்னர் வெறும் வெற்றுப் பேச்சுக்களை விடுத்து இந்த நாட்டின் சுற்றுச் சூழல் குறித்து தெரிந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன். மக்கள் விடுதலை முன்னணியின் தலைவருக்கும் நீங்கள் சோஷலிச சமூகத்தை உருவாக்கு முன்னர், கண்டி சிங்கள உடன்படிக்கையை படிக்குமாறுநாம் சொல்கின்றோம்.
சிங்கள இனவாதம் என்று எல்லா அரசியல் வாதிகளும் கத்துகின்றனர். விக்னேஸ்வரனின் இனவாதம் ஒருவருக்கும் தென்படுவதில்லை. ஹக்கீமின் இனவாதம் ஒருவருக்கும் காண்பதில்லை. இது லொறியின் முன்னால் புது சரணய் என்று போட்டுக்கொண்டு, உள்ளே கள்ள மாடுகளை எடுத்துச் செல்வதைப் போன்றது. முன்னால் புது சரணய் என்று அடிக்கப்பட்ருந்தால் உள்ளே மாடு இல்லை என்று நினைப்பார்கள் தானே எனவும் தேரர் மேலும் கூறினார்.
|