சாலிய விக்ரமசூரிய பிணையில் விடுதலை
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ராடா நிறுவனத்தின் பிரதம நடவடிக்கை அதிகாரி சாலிய விக்ரமசூரிய உள்ளிட்ட இருவர் இன்று பிணையில் விடுவிக்கப்பட்ட...


விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ராடா நிறுவனத்தின் பிரதம நடவடிக்கை அதிகாரி சாலிய விக்ரமசூரிய உள்ளிட்ட இருவர் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சுனாமி வீடமைப்புத் திட்டத்திற்காக ராடா நிறுவனம் பெற்றுக்கொண்ட 169 மில்லியன் ரூபாவை மோசடி செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
சந்தேகநபர்கள் இன்று கொழும்பு கோட்டை நீதவான் பிரியந்த லியனகே முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்தும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களை தலா 50 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும், தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.