விமானப்படையின் இரகசிய ஆவணங்கள் அம்பலமானது குறித்து விசாரணை
இலங்கை விமானப்படையின் இரகசிய ஆவணங்கள் அம்பலப்படுத்தப்பட்டமை குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட உள்ளது. விமானப்படைத் தளபதி தெரிவு தொடர்பில்...


விமானப்படைத் தளபதி தெரிவு தொடர்பில் நிலவிய சர்ச்சைகள் பரிந்துரை செய்யப்பட்டவர்களின் செயற்பாடுகள் குறித்து ஊடகங்களில் தகவல் வெளியாகியிருந்தன.
விமானப்படையின் சில இரகசிய ஆவணங்கள் எவ்வாறு வெளிநபர்களுக்கு கிடைத்தது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளது.
புதிய விமானப்படைத் தளபதி ககன் புலத்சிங்களவிற்கு எதிராக இணையத்தில் இரகசிய ஆவணங்கள் வெளியிடப்பட்டிருந்தன.
இந்த ஆவணங்களை அம்பலப்படுத்திய சிரேஸ்ட விமானப்படை அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
தகவல்களை வெளியிட்டவர்கள் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் இந்த விடயங்கள் அம்பலமாகிவிடும் என்ற காரணத்தினால் புதிய விமானப்படைத் தளபதிக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகவும் உயர் விமானப்படை அதிகாரியொருவர் சிங்கள ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.