காபந்து அரசாங்கத்தில் அமைச்சர்களின் பதவி நிலைகள் தொடரும்: நீதியமைச்சர்
எதிர்வரும் பொதுத்தேர்தல் நிறைவடைந்து புதிய அமைச்சர்கள் பதவியேற்கும் வரை தற்போதைய அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்களின் பதவிகள் நடைமுறைய...


19வது அரசியலமைப்பு திருத்தத்தின்படி, பொதுத்தேர்தலின் முன்னர் காபந்து அரசாங்கத்தின் அமைச்சரவை அமைச்சர்கள் மாத்திரமே செயற்பட முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் 19வது திருத்தம், பொதுத்தேர்தல் முடிவடைந்ததன் பின்னரே நடைமுறைக்கு வரும் என்பதால் அமைச்சரவை அமைச்சர்கள், ராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்களின் பதவிகள் இந்த பொதுத்தேர்தலின் போது ரத்துச் செய்யப்படாது என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.