சாலையில் பெண்ணின் கழுத்தை பிடித்து நெறித்த பேருந்து ஓட்டுனர் (வீடியோ இணைப்பு)
போக்குவரத்து சிக்னலை மீறியதாக கூறி பெண் ஒருவரை சாலையில் வைத்து பெண் பேருந்து ஓட்டுனர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தா...


போக்குவரத்து சிக்னலை மீறியதாக கூறி பெண் ஒருவரை சாலையில் வைத்து பெண் பேருந்து ஓட்டுனர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவின் லண்டன் நகரின் அருகில் உள்ள ஸ்டேம்போர்ட் தெரு அருகே ஒரு பேருந்து சென்று கொண்டிருந்தது.
இந்நிலையில் அதை ஓட்டி வந்த பெண் ஓட்டுனர் போக்குவரத்து சிக்னலில் பேருந்தை நிறுத்தாமல் சென்றதால் அவரை பெண் ஒருவர் வீடியோ எடுத்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த பேருந்து ஓட்டுனர் பேருந்தை சாலையின் நடுவே நிறுத்திவிட்டு அந்த பெண்ணுடன் கட்டிப்புடி சண்டையில் ஈடுபட்டார்.
பின்னர் அவரின் குரல்வளையை பிடித்த ஓட்டுனர் அவரை கீழே தள்ளி சரமாரியாக தாக்கினார்.
இந்த தாக்குதலில் அந்த பெண் பயங்கரமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை தடுக்க வந்த ஆண் ஒருவரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர் எந்த பதற்றமும் இல்லாமல் பேருந்தில் ஏறி சென்றுள்ளார்.
இந்த காட்சிகள் அங்கிருந்த ஒரு வாகனத்தின் சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருவதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.