10 வருட சேவைக்கு பின் ராணுவத்தில் இருந்து விடைபெற்ற இளவரசர் ஹரி
இளவரசர் ஹரி பிரித்தானியா ராணுவத்தில் இருந்து நேற்று விடைப்பெற்றார் என்று அரச குடும்பத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது....


இளவரசர் ஹரி பிரித்தானியா ராணுவத்தில் இருந்து நேற்று விடைப்பெற்றார் என்று அரச குடும்பத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளாக பிரித்தானிய ராணுவத்தில் பணியாற்றி வந்த இளவரசர் ஹரி நேற்று விடைபெற்றார்.
இதையடுத்து அவர் விலங்குகளை பாதுகாப்பது தொடர்பான திட்டங்களுக்காக ஆப்பிரிக்கா செல்லவுள்ளார். அங்கு அவர் மூன்று மாதங்கள் தங்கியிருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பிரித்தானிய அரச குடும்பத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் வலைதளமான கென்சிங்க்டன் அரண்மனை செய்தி வெளியிட்டுள்ளது.
ஹரி முழுமையாக தனது பணிகளை செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
மேலும் அவரது தந்தை சார்லஸ் மற்றும் அவரது அண்ணன் வில்லியம்சை போல் அவரும் வனவிலங்கு பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தருவதாகவும், எனவே எதிர்வரும் 3 மாதங்கள் அவர் ஆப்பிரிக்காவில் வனவிலங்கு பாதுகாப்பு தொடர்பான திட்டங்களில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.