கத்தாரில் 279 இந்திய கட்டிட தொழிலாளர்கள் ஒரே ஆண்டில் மரணம்: அதிர்ச்சி தகவல்

கத்தார் நாட்டிற்கு வேலைக்குச் சென்ற 279 இந்திய கட்டிட தொழிலாளர்கள் மரணமடைந்திருப்பதாக, சர்வதேச மன்னிப்பு சபையின் (Amnesty) ஆய்வு தெரிவித்துள...

கத்தார் நாட்டிற்கு வேலைக்குச் சென்ற 279 இந்திய கட்டிட தொழிலாளர்கள் மரணமடைந்திருப்பதாக, சர்வதேச மன்னிப்பு சபையின் (Amnesty) ஆய்வு தெரிவித்துள்ளது.

சர்வதேச மன்னிப்பு சபை (Amnesty) “Promising Little, Delivering Less: Qatar and Migrant Abuse ahead of the 2022 Football World Cup” என்ற தலைப்பில் ஆய்வு ஒன்றை வெளியிட்டுள்ளது.

கத்தாரில் வரும் 2022-ம் ஆண்டு, பிஃபா உலக கிண்ண கால்பந்து தொடர் போட்டி நடக்கவுள்ளது.

இந்நிலையில் கத்தாரில் இதற்கான கட்டமைப்பு வசதிகள் நடந்துவருகிறது.

அந்த வசதிகளை கட்டமைப்பு செய்வதற்காக கட்டிட தொழிலாளர்கள், பெரும்பாலும் இந்தியாவிலிருந்து தான் அதிகளவு சென்றுள்ளனர்.

இதுகுறித்து கத்தாரிலிருந்து வந்த கங்கா பிரசாத் என்பவர் கூறுகையில், எனக்கு அங்கு, அடையாள அட்டை எதுவும் கொடுக்கப்படவில்லை.


இதனால் வேறெங்கும் வெளியே செல்ல முடியாமல் கட்டுமான தளம், மற்றும் தொழிலாளர்களுக்கான நாற்றமடிக்கும் அறையிலேயே என் காலம் கழிந்துவிட்டது.

என் பாஸ்போர்ட்டும் அவர்களின் கையிலேயே இருந்ததால், வேறு எங்கும் சென்று வேலை தேட முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது என்று தெரிவித்துள்ளார்.

கடந்த 4 ஆண்டுகளில் மொத்தம் 1000 இந்திய தொழிலாளர்கள் கத்தாரில் மரணமடைந்துள்ளனர்.

மேலும், கடந்த 2014-ம் ஆண்டில் மட்டும் வேலைக்குச் சென்ற 279 இந்திய கட்டிட தொழிலாளர்கள் மரணமடைந்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

Related

தலைப்பு செய்தி 6055337314089183339

Post a Comment

emo-but-icon

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in week

Recent

item