நைஜீரியாவில் எரிபொருள் ஏற்றிச் சென்ற வாகனம் தீப்பிடித்து 69 பேர் பலி
நைஜீரியாவின் கிழக்குப் பகுதியில், எரிபொருள் ஏற்றிச் சென்ற டிரக் தீப்பிடித்ததை அடுத்து, 69 பேர் பலியாகியுள்ளனர். மிகவும் சிரமத்தின் பின...


நேற்று ஞாயிற்றுக்கிழமை, ஒனிட்ஷா நகரில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தை ஒரு விபத்தாகக் கருதி காவல்துறையினர் கையாண்டு வருகின்றனர்.
எரிபொருள் நிரம்பிய அந்த டிரக் வண்டியை ஓட்டி வந்தவர் தனது கட்டுப்பாட்டை இழந்ததை அடுத்து, அந்த வாகனம் சனநெருக்கடி மிகுந்த பேருந்து நிலையத்தில் மோதியதாக, சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகிறார்கள்.
இந்த விபத்தின் காரணமாக வேறு 12 வாகனங்களும் தீப்பற்றிக் கொண்டதாக, மீட்புப் பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
நைஜீரியாவில் எரிபொருள் தாங்கிகள் விபத்துக்கு உள்ளாகின்றமை பொதுவானவையே என, அங்குள்ள பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்னர், நைஜர் டெல்ட்டா பகுதியில் தடம்புரண்ட தாங்கி ஒன்றிலிருந்து, எரிபொருளை சேகரித்துக் கொண்டிருந்த நூற்றிற்கும் அதிகமானோர், தீ பற்றிக் கொண்டதில் சிக்கிப் பலியாகினர்.