அல்கொய்தா தீவிரவாதிகள் 12 பேர் படுகொலை : மற்ற அமைப்புகளுக்கு சவால்விடும் ஐ.எஸ்

தங்கள் அமைப்பில் சேர மறுத்த மற்ற அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகளை ஐ.எஸ் தீவிரவாதிகள் கொன்ற காட்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிரியாவில் ஐ.எஸ...

தங்கள் அமைப்பில் சேர மறுத்த மற்ற அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகளை ஐ.எஸ் தீவிரவாதிகள் கொன்ற காட்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிரியாவில் ஐ.எஸ் அமைப்பினர் பல்வேறு வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த அமைப்பினர் ராணுவத்துக்கு எதிராக மட்டுமில்லாமல் மற்ற தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராகவும் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் அல்கொய்தா மற்றும் ஜய்ஸ் அல் இஸ்லாம் அமைப்பை சேர்ந்த 12 தீவிரவாதிகளை கொலை செய்யும் வீடியோவை அவர்கள் வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தியுள்ளனர்.

தங்களுக்கு எதிராக சண்டையில் ஈடுபட்ட மற்ற அமைப்பை சேர்ந்த 12 பேரிடம் தங்கள் அமைப்பில் சேர ஐ.எஸ் அமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர். அவர்கள் மறுத்ததையடுத்து அவர்களை படுகொலை செய்ய முடிவு செய்தனர்.

சிரியாவின் டமாகஸ் பகுதியில் எடுக்கப்பட்டது என கூறப்படும் அந்த வீடியோவில் மற்ற அமைப்புகளை சேர்ந்த 12 கைதிகளும் அவர்களை படுகொலை செய்த 12 ஐ.எஸ் அமைப்பினரும் உள்ளனர்.

முதலில் கைதிகள் தங்களின் தவறுக்காக மன்னிப்பு கேட்கின்றனர். பின்னர் அவர்களின் படுகொலை செய்யப்படுவது பதிவாகியுள்ளது. அவர்கள் படுகொலை செய்யப்படுவதற்கு முன் ஐ.எஸ் அமைப்பினருக்கும் அல்கொய்தா உள்ளிட்ட மற்ற தீவிரவாத அமைப்புகளுக்கு இடையே ஏற்பட்ட சண்டைகளும் அதில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் அதில் பேசும் ஐ.எஸ் வீரர் ஒருவர் மற்ற தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர் அனைவரும் ஐ.எஸ் அமைப்பில் சேரவேண்டும் என்றும் அபு பக்கர் அல் பாக்தாதியை தங்களின் தலைவராக ஏற்கவேண்டும் என்று தெரிவிக்கிறார். இல்லையென்றால் அவர்களுக்கு இதே நிலைமைதான் ஏற்படும் என்று எச்சரிக்கை செய்கிறார்.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள இந்த வீடியோ உலக நாடுகள் மட்டுமில்லாமல் மற்ற தீவிரவாத அமைப்புகளிடத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related

தாய்லாந்து மன்னரை அவமதித்து பேஸ்புக்கில் எழுதியவர்க்கு 30 வருட சிறை!!

தாய்லாந்தில், மன்னரை அவமதிக்கும் கருத்துக்களை ஃபேஸ்புக்கில் வெளியிட்ட நபருக்கு 30 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தாய்லாந்தில் அரச குடும்பத்தினரை அவமரியாதை செய...

குறை மாதத்தில் பிரசவம் நிகழ்ந்ததால் வந்த வினை: அரசாங்கத்தின் இரக்கமற்ற செயலால் அதிர்ச்சி அடைந்த தாய் (வீடியோ இணைப்பு)

கனடா நாட்டை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவர், குறிப்பட்ட மாதத்திற்கு முன்னதாகவே பிரசவம் நிகழ்ந்ததால், அதனால் அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய கட்டணத்தை செலுத்த முடியாமல் அவதியுற்று வருகிறார்.கனடாவின் Albe...

“ஜேர்மனி நாட்டை பூண்டோடு அழிப்போம்”: ஐ.எஸ் தீவிரவாதிகள் வெளியிட்ட பகிரங்க மிரட்டல் !!

ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் இணைந்துள்ள இரண்டு ஜேர்மனியை சேர்ந்த தீவிரவாதிகள் அந்நாட்டில் பயங்கர தாக்குதல்கள் நடத்துவோம் என பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளனர்.ஐ.எஸ் தீவிரவாதிகளால் கைப்பற்றப்பட்ட சிரியாவில் உ...

Post a Comment

emo-but-icon
:noprob:
:smile:
:shy:
:trope:
:sneered:
:happy:
:escort:
:rapt:
:love:
:heart:
:angry:
:hate:
:sad:
:sigh:
:disappointed:
:cry:
:fear:
:surprise:
:unbelieve:
:shit:
:like:
:dislike:
:clap:
:cuff:
:fist:
:ok:
:file:
:link:
:place:
:contact:

Advertise Your Ad Here

Advertise Your  Ad Here

Connect Us

Side Ads

Hot in weekRecent

Hot in week

Recent

item